ஒரு நாடு இரு தேசம் - விளங்காத புதிர்தான்....!
ஒரு நாடு இரு தேசம் அவர்களின் கொள்கை. தமக்கு ஏதாவது நேர்ந்தால் நாட்டின் உயரிய சபையில் மன்றாட்டம்.இதுதான் அண்மையில் நடந்திருப்பதாக முகநூலில் கரித்து கொட்டுகிறார்கள் பயனர்கள்.
இன்று கைது செய்யப்பட்டும் எந்த நாடும் எந்த மனித உரிமைகள் ஸ்தாபனமும் கண்டுகொள்ளவே இல்லை....! மாறாக சிறப்புரிமையை பயன்படுத்தி ஆவேசமான பேச்சு வேறு. கேட்டால் "ஒரு நாடு இரு தேசம்" சொத்து முழுக்க முழுக்க தெற்கில்...! வடக்கு கிழக்கில் அவர்கள் கூறும் தமிழர் தாயகப்பரப்பில் எந்த முதலீடுகளையும் மக்களுக்காக மேற்கொள்ளவில்லை ...!
வடக்கு மாகாண சபை தேர்தலில்
நேரத்துக்கு ஒருவரை சீசனுக்கு தலைவர் தலைவர் என்று கூவும் சட்டத்தரணி ஐயா...! மாகாணசபையையே ஏற்கமாட்டோம் என்றீர்கள். பின்னர் நடந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் மண்டியிட்டு கிடந்து காப்பாத்துங்கோ காப்பாத்துங்கோ என கதறி விட்டு...! சட்டையை தூக்கி தூக்கி லோயர் லோயர் என்பதும்....! பத்து தரம் பெயர் சொல்ல யோசிக்கணும் என்றதும் எவருக்கும் விளங்காத புதிர்தான்....!
உங்கள் கைதுக்கு கூட கரம் கொடுக்க வராத எந்த நாடுகளும் தமிழ் மக்களின் சார்பில் நீங்கள் கொண்டு வரும் எந்த விடயத்தையும் ஏற்காது என்பதே நிதர்சனம்....! இதனால் தமிழ்மக்களுக்கும் எதுவும் நடக்கப்போவதில்லை.
கைது செய்யாமல் காப்பாற்ற நாடாளுமன்ற சிறப்புரிமை கேட்டு
சும்மா மக்களை உசுப்பேற்றி நாடாளுமன்றம் சென்று மக்களின் வாக்கில் சிறப்புரிமை கேட்டு சண்டை பிடிக்கும் நிலைமைக்கு போய் உள்ளது உங்கள் "ஒரு நாடு இரு தேசம்" ஆக நீங்கள் இன்று 13 வேண்டாம் எனலாம் ஒரு நாடு இரு தேசம் எனலாம் கடைசியில் கைது செய்யாமல் காப்பாற்ற நாடாளுமன்ற சிறப்புரிமை கேட்டு சபாநாயகரிடம் மன்றாடியதை மறக்கமாட்டோம்...
இறுதியில் தமிழ் மக்களுக்கான உரிமைப்போராட்டம் இப்போது தனி ஒருவருக்கானதாக மாறிவிட்டதா என கேட்கும் நிலைக்கு சென்றுவிட்டது.
மக்கள் மறக்காமல் இருக்க இடையிடையே யாழ்ப்பாணத்தில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு.அதில் அவரைத் திட்டி இவரைத்திட்டி வசைபாடல் நாங்கள் தூய தமிழ்தேசிய வாதிகள் என வேறு.மற்றவர்கள் எல்லாம் போலி தேசியவாதிகள் என பித்தலாட்டம்.பின்னர் ஆள் எங்கே என்றால் அவர் கொழும்புக்கு.
இதுதான் தூய தமிழ் தேசியவாதிகளின் உசுப்பேத்தும் அரசியல்.பாவம் தமிழ் மக்கள். நம்பி வாக்களித்ததற்காக..!
