கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச் சேவையில் ஈடுபட்டு வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, குறித்த பணியாளர்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரை சேவையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கடவுச்சீட்டு பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளல்
அத்துடன் இதன்மூலம் அவசர தேவைப்பாடுகளுக்காகக் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள உள்ளவர்கள் நன்மையடையவுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இணையவழி மூலம் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான தினத்தை ஒதுக்கிக் கொள்வதற்காக நாளாந்தம் ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குடிவரவு திணைக்களம் (Department of Immigration) 10 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்க தீர்மானித்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |