மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
A D Susil Premajayantha
Sri Lankan Schools
By Vanan
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் 2 மில்லியனாக அதிகரிக்கப்படவுள்ளது.
அடுத்த பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
தற்போது 1.2 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
தேசிய வேலைத்திட்டம்
USAID, உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஜனவரி மாதம் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம், பெற்றோருக்கு, பொருளாதார பிரச்சினைகளில் இருந்து, ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாடசாலை மாணவர்கள் வகுப்பறையில் சரியான கவனத்துடன் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அமெரிக்க அரசாங்கம் அதிக பாடசாலைகளுக்கு மதிய உணவை வழங்குவதற்கு நிதியுதவி அளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி