மசாஜ் நிலையம் சென்றவருக்கு நடந்த துயரம்!
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Death
By Pakirathan
நேற்றையதினம் இரவு மசாஜ் நிலையம் ஒன்றிற்கு சென்ற நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் கந்தானை பகுதியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 42 வயதுடைய நபர் என காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கந்தானை, நாகொட பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் நேற்றைய தினம் நள்ளிரவு மசாஜ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
காரணம்
அதன் பின்னர் இன்றையதினம் காலை அவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த மரணம் இயற்கையாக இடம்பெற்றதா அல்லது அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா என கந்தானை காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி