க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை - இம்மாதம் 18 ஆம் திகதி
G.C.E.(A/L) Examination
Sri Lankan Schools
By pavan
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்பத் தேர்வு (GIT) பரீட்சை இம்மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சை பல வருடங்களாக நடைபெறவில்லை எனவும், இம்முறை 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இதில் கலந்துகொள்ள முடியும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தேர்வு நுழைவுச் சீட்டு, பள்ளி வருகைப்பதிவு ஆவணங்கள் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது என்றும், அதற்கு பதிலாக இளையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இணையத்தளம்
அரச பாடசாலைகளுக்கான https://online exams.gov.lk/eic இணையத்தளத்திலிருந்து அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி