பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா : அச்சத்தில் பாகிஸ்தான்
இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கையை எந்நேரத்திலும் மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் இருப்பதாக சர்வதேச உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக பாகிஸ்தான் விமானப்படையை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
கடும் நடவடிக்கை
இந்த தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை என்ற ஒற்றை புள்ளியில் மத்திய அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.
இதனால், இந்தியாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என பாகிஸ்தானும் உற்றுநோக்க ஆரம்பித்துள்ளது.
நிச்சயம் பதிலடி உண்டு என்று உறுதியான குரல்கள் எழு தொடங்கி உள்ள நிலையில், பாகிஸ்தான் தனது தரப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ஆயத்தமாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தயார்
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்ட ஐஎஸ்ஐ இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
அதன் விளைவாக இந்தியாவின் தரப்பில் இருந்து எப்படியும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் (இது ஒரு இராணுவ தாக்குதல், இலக்கை மட்டுமே குறிவைத்து தாக்கும் நடவடிக்கை) இருக்கலாம் என்பதால் அதை எதிர்கொள்ள பாகிஸ்தான் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக, தமது விமானப்படை விமானங்களை பாகிஸ்தான் தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
