தொடருந்தில் இணையவழிமுறையின் மூலம் ஆசன முன்பதிவு : வெளியான தகவல்
Sri Lanka Railways
Department of Railways
Railways
By Shalini Balachandran
இணையவழிமுறையின் மூலம் ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரம் இன்று (01) முதல் திருத்தப்படவிருந்த நிலையில் அது மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இணையவழி முறை
இந்தநிலையில், இணையவழி முறை மூலம் தினமும் இரவு 7.00 மணிக்கு ஆசன ஒதுக்கீடு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதனை திருத்தம் செய்து காலை 10.00 மணிக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், கணினி அமைப்பின் தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக அதனை முன்னர் இருந்த நேரத்திற்கே மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து துணை முகாமையாளர் எம்.என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 5 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்