இணையவழி வீசா தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழி முறையின் ஊடாக சமர்பிப்பதற்கு அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, குறித்த அனுமதி வழங்கப்பட்டதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்களுக்கான விசா
2023 செப்டம்பரில், இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கான விசா விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட முகவராகச் செயல்பட, GBS Technology Services & IVS Global – FZCO மற்றும் VFS VF Worldwide Holdings Ltd சமர்ப்பித்த முன்மொழிவை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டுக் குழுவை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்தது.
அதன்படி நியமிக்கப்பட்ட மதிப்பீட்டுக் குழு இந்த விவகாரம் தொடர்பாக தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், அந்த அறிக்கையின் பரிந்துரைகளின்படி செயற்படுவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவையும் இணக்கம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |