இஸ்ரேலில் இருந்து இந்திய மக்களை மீட்க ஒப்ரேசன் அஜய் நடவடிக்கை
இஸ்ரேலில் இருந்து இந்திய மக்களை மீட்கும் ஒப்ரேசன் அஜய் நடவடிக்கையின் முதற்கட்டத்தின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் உட்பட 214 பேர் இந்தியாவை சென்றடைந்தனர்.
இதில் தழிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களை சென்றடைந்ததாக தமிழக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இஸ்ரேலில் தமிழகத்தைச் சேர்ந்த 114 பேர் இருப்பதாக அறிவிக்கபட்ட நிலையில், அவர்களின் விமான பயணச்சீட்டுகளுக்குரிய செலவை தமிழக அரசு ஏற்றிருந்தது.
தாயகம் மீட்கும் பணி
'இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழர்கள் பலர் தாயகம் திரும்ப முடியாமல் அங்கே சிக்கித் தவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, அங்குள்ள தமிழர்களுக்கு உதவிடும் வகையில், தமிழக அரசின் சார்பில் உதவி எண்கள் வெளியிட்டு அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
அப்படி சேகரிக்கப்பட்ட விவரங்கள், மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்திடமும் பகிரப்பட்டு, அவர்களை தாயகம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” என மிழக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.