அரசின் கிபுல் ஓயா திட்டத்தை எதிர்ப்போம்: இலங்கை தமிழ் அரசுக்கட்சி அறைகூவல்
வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் நோக்கம் என்ற போர்வையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிபுல் ஓயா திட்டம் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கம் கொண்டது எனவும் அதற்கெதிராக அனைவரும் தமது எதிர்ப்பை காட்ட முன்வரவேண்டும் எனவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விரிவாக எடுத்து விளக்கிய சத்தியலிங்கம்
கடந்த திங்கட்கிழமை 20ஆம் திகதி அமைச்சரவை மேற்சொன்ன மாகாவலி திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இத் திட்டம் எப்படியாக இனப்பரம்பலை மாற்றி அமைக்கும் என்றும் தமிழ் மக்களின் உரிமைகளை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதையும் எமது நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம் நாடாளுமன்றத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.

இந்த திட்ட அமுலாக்கலை தடுக்கும் வகையில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை நாம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டங்களில் எம்மோடு இணைந்து கொள்ளுமாறு மற்றைய கட்சிகளையும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்தடுத்த நாட்களில் இது சம்பந்தமான கலந்துரையாடல்கள் வவுனியாவிலும் நாம் நடாத்த உள்ளோம். இவற்றிலும் கலந்து கொண்டு உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து இப் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்குமாறு சகலரையும் அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |