ரணிலின் கைதானது தனிப்பட்ட ஒரு சம்பவமல்ல - சஜித்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்ட ஒரு சம்பவமல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மாறாக, ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்ட வலுவான சவாலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து எழுந்துள்ள அரசியல் நிலைமை குறித்து, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே, எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி
இந்த சவாலை எதிர்கொள்ள எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன, இந்தத் தருணத்தில் இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அதன்படி, ரணில் விக்ரமசிங்கவை விடுவிப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், நாட்டின் ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்ட சவாலை வெற்றிகொள்வது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

