இந்திய விரோத கொள்கையால் திணறும் மாலைதீவு அதிபர்
மாலைதீவு நாடாளுமன்றத்தின் முதல் அமர்வைத் தொடங்கி வைத்து மாலைதீவு அதிபர் மொஹமட் முய்சு பேசியபோது, நாடாளுமன்றத்தில் இரு எதிர்க்கட்சி அரசியல் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதிபருக்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரது உரையை புறக்கணித்து விட்டு அவையில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிரான கொள்கை
அதிபர் முய்சுவின் சீனாவுக்கு ஆதரவான மற்றும் இந்தியாவுக்கு எதிரான கொள்கை காரணமாக இந்த எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து
சமீபத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து அதிபர் முய்சு வெளியிட்ட அறிக்கை எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பிற்கு வழிவகுத்தது.
அந்தச் சம்பவத்தின் அடிப்படையில், இந்தியப் பிரதமரிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு மாலைதீவு அதிபர் முய்சு தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |