ஒதியமலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு: ஒட்டுசுட்டான் காவல்துறையினர் குழப்பம்(படங்கள்)

Sri Lanka Army Sri Lanka Police Tamils Mullaitivu Sri Lankan Peoples
By Shadhu Shanker Dec 02, 2023 11:10 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் ஒதியமலை படுகொலை நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் திடீரென காவல்துறையினர் புகுந்து குழப்பம் விளைவித்துள்ளனர்.

 ஒதியமலைப் படுகொலையின் 39 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (02) ஒதியமலை சனசமூகநிலைய வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

யாழில் கோர விபத்து:சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்(படங்கள்)

யாழில் கோர விபத்து:சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்(படங்கள்)

 படுகொலை

ஒதியமலைப் பகுதியில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி அதிகாலை வேளையில் புகுந்த இராணுவத்தினரும், சிங்களவர்களும் ,அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்களை சனசமூக நிலையத்திற்கு வரவழைத்துவிட்டு அவர்களது ஆடைகளை களைந்து அவற்றினால் அவர்களை கட்டி 27 பேரை சுட்டும், வெட்டியும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்திருந்தனர்.

ஒதியமலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு: ஒட்டுசுட்டான் காவல்துறையினர் குழப்பம்(படங்கள்) | Othiyamalai Massacre Commemoration Policeconfusion

5 பேர் கடத்தப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டதாகவே உறவினர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(02) நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகி நிகழ்வு அமைதியாக  இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென நுழைந்த ஒட்டுசுட்டான் காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஒலிபெருக்கி பாவிப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெறவில்லை என தெரிவித்து நிகழ்வில் குழப்பத்தை விளைவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தையை பிரசவித்த தாய் மரணம்: வைத்தியசாலை மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தையை பிரசவித்த தாய் மரணம்: வைத்தியசாலை மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு

காவல்துறையினர் புகுந்து குழப்பம்

நிகழ்வின் இடையில் புகுந்த ஒட்டுசுட்டான் காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஒலிபெருக்கிகான அனுமதிப்பத்திரத்தை காண்பிக்குமாறும் நிகழ்வை நிறுத்துமாறும் கூறினர்.

ஒதியமலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு: ஒட்டுசுட்டான் காவல்துறையினர் குழப்பம்(படங்கள்) | Othiyamalai Massacre Commemoration Policeconfusion

இதன்போது அந்த இடத்தில் பாரிய குழப்பநிலை ஏற்பட்டது.  திட்டமிட்ட வகையிலே ஒட்டுசுட்டான் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி நிகழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கோடு செயற்ப்பட்டதாக அங்கிருந்த மக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளாக தாங்கள் நிகழ்வை மேற்கொள்வதாகவும் எந்த காவல்துறையினரும் குழப்பத்தை விளைவிக்கவில்லை.

வீதியில் கண்டெடுத்த பெருந்தொகை பணம்,நகை : மாணவிகளின் செயலால் பெருமை கொள்ளும் பாடசாலை

வீதியில் கண்டெடுத்த பெருந்தொகை பணம்,நகை : மாணவிகளின் செயலால் பெருமை கொள்ளும் பாடசாலை

கடுமையான வாக்குவாதம்

நிகழ்வு இடம்பெற்ற நிலையில்  நீங்கள் மட்டும் திட்டமிட்டு குழப்பத்தில் ஈடுபடுவதாகவும் ஆரம்பிக்க முன்னர் பேசாமல் இருந்து விட்டு இடையில் வந்து குழப்புகிறீர்கள் என கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒதியமலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு: ஒட்டுசுட்டான் காவல்துறையினர் குழப்பம்(படங்கள்) | Othiyamalai Massacre Commemoration Policeconfusion

இதன் பின்னர் பத்து நிமிடங்களில் நிகழ்வை நிறைவு செய்யுமாறு காவல்துறையினர் கூறிச் சென்றனர்.

அதன் பின்னர் ஏற்கனவே செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக நிகழ்வு இடைநடுவில் நிறைவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL  இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026