உலகளாவிய ரீதியில் வரலாற்று சாதனை புரியும் 12 வயது சிறுமி..!
Canada
World
By Kiruththikan
கனடாவில் 12 வயது சிறுமியொருவர் பல்கலைக்கழக பட்டமொன்றை பெற்று சாதனை நிலைநாட்ட உள்ளார்.
கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழத்தில் உயிரியல் மருத்துவ விஞ்ஞானப் துறையில் இளநிலை பட்டம் பெற்றுக்கொள்ள உள்ளார்.
கனடிய வரலாற்றில் மிக இள வயதில் பல்கலைக்கழக பட்டம் பெற்றுக்கொண்டவர் என்ற சாதனையை அன்தியா கிரேஸ் பெட்ரிசியா டென்னிஸ் என்ற சிறுமி பெற்றுக்கொள்ள உள்ளார்.
ஒன்பது வயதில் பல்கலைக்கழகம்
பெட்ரிசியா டென்னிஸ் தனது ஒன்பது வயதில் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
பட்டம் பெற்றுக்கொள்வது பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்