வெளியே போராட்டக்காரர்கள்! அலரி மாளிகையிலிருந்து வெளிவரும் பெரும் சத்தம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan political crisis
By S P Thas
அலரி மாளிகைக்கு வெளியே பெருமளவானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அலரி மாளிகையிலிருந்து பிரித் ஓதும் சத்தம் கேட்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித் ஓதும் சத்தமானது மிக அதிகமாக கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டக் காரர்கள் கூடாரம் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதனை தடுப்பதற்காக பிரித் ஓதும் சத்தம் ஒலிக்கச் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது பிரித் ஓதும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சத்தத்தின் காரணமாக அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4ம் ஆண்டு நினைவஞ்சலி