ஈரானில் பற்றி எரியும் மக்கள் போராட்டம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
ஈரானில் இடம்பெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில், 5000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானில் மோசமடைந்துள்ள பொருளாதார நிலைமையைக் கண்டித்து நாடெங்கிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
பாதுகாப்புப் படையினா்
இது தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
இந்த பதற்றமான சூழலைத் தொடர்ந்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையே இவ்வாறு அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், வடமேற்கு ஈரானின் குர்தீஷ் பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, ஈரானில் நடைபெறும் தொடர் போராட்டங்களில் உயிரிழந்தவர்களில் சுமார் 500 பேர் பாதுகாப்புப்படையினர் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |