வீடுகளை புனரமைப்பதற்காக 6,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் விடுவிப்பு
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவுகளால் அழிக்கப்பட்ட வீடுகளை புனரமைப்பதற்காக 6,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை நில மேம்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலங்கள் அனைத்தும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று நில ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர (Chandana Ranaweera) தெரிவித்தார்.
ஆய்வுகள் முடிந்தவுடன்
பாதுகாப்பு ஆய்வுகள் முடிந்ததும் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக நிலங்கள் விடுவிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை சமீபத்திய பேரழிவுகளில் வீடுகள் சேதமடைந்த அல்லது அழிக்கப்பட்ட பெருந்தோட்டத் துறை குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை நிர்மாணிக்கும் திட்டம் நடைபெறவுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை (NHDA) அறிவித்துள்ளது.
அரசாங்கம் அதன் நீண்டகால நிரந்தர வீட்டுத் திட்டத்தைத் தொடங்கும் வரை இடைவெளியைக் குறைக்கும் வகையில், தற்காலிக வீட்டுவசதித் திட்டம் அடுத்த சில மாதங்களில் செயற்படுத்தப்படும் என்று அந்த சபையின் தலைவர் அரவிந்த சிறிநாத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |