அழுத்தங்களுக்கு உள்ளாகி எவரையும் பதவி நீக்க முடியாது - ரணில் வெளிப்படை

Ranil Wickremesinghe University of Ruhuna SL Protest
By Vanan Feb 15, 2023 02:26 PM GMT
Report

குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள் இருப்பதனால் அரசாங்கம் அவற்றை முறைப்படி பின்பற்றியே செயற்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு ட்ரேஸ் சிட்டியிலுள்ள இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியின் (SLTC) ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் இன்று (15), நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கைக்கான மையத்தை (C-GaPP) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோரிக்கைகள்

அழுத்தங்களுக்கு உள்ளாகி எவரையும் பதவி நீக்க முடியாது - ரணில் வெளிப்படை | Overnment Will Not Be Pressured Protests President

இங்கு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இது தொடர்பில் குறிப்பிட்ட அதிபர், இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பாரிய பொறுப்பு பல்கலைக்கழகங்களுக்கே அதிகளவில் உள்ளன.

இரண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்திலேயே இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியின் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கைக்கான மையம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

அதில் ஒன்று உப வேந்தரை நீக்கக் கோரி ருஹுணு பல்கலைக்கழகத்திலும் மற்றையது எமது கூட்டுத்தாபனம் ஒன்றின் பொது முகாமையாளரை நீக்கக் கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொது முகாமையாளரை பதவி நீக்குவதென்பது அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டதொரு விடயம்.

“ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்தமைக்காக நாம் அவரை பதவியிலிருந்து நீக்க மாட்டோம். அவருக்கு எதிராக ஏதேனும் தீவிரமான குறைபாடுகள் இருப்பதாக அவர்கள் நினைத்தால் அதற்காக பின்பற்ற வேண்டிய நடைமுறை ஒன்று உள்ளது.

உப வேந்தர்கள் தொடர்பிலும் பின்பற்ற வேண்டிய நடைமுறையொன்று உள்ளது. மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காகவும் அது கூட்டுதாபனம் அல்லது பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது என்பதற்காகவும் இந்த அரசாங்கம் மாறாது. நாம் விதிமுறைகளைப் பின்பற்றி அதன்படியே செயற்படுவோம்.

ருஹுணு பல்கலைக்கழக ஆர்ப்பாட்டம்

அழுத்தங்களுக்கு உள்ளாகி எவரையும் பதவி நீக்க முடியாது - ரணில் வெளிப்படை | Overnment Will Not Be Pressured Protests President

ஏனெனில், நான் தற்போது இவற்றை கருத்திற்கொண்டால், அடுத்த தடவை அவர்களுக்கு பீடாதிபதிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோரையும் பதவி நீக்கும் தேவை ஏற்படும். பின்னர் தங்களைக் கேட்காமல் எம்மால் பேராசிரியர் ஒருவரை நியமிக்க முடியாது என்றும் அவர்கள் எம்மிடம் கூறமுடியும்.” என்று அதிபர் தெரிவித்தார்.

“இந்தப் பல்கலைக்கழகங்களில் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து நாம் தீவிரமாக பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன். என்ன நடக்கிறது என்பதை அறியும் உரிமை நாட்டுக்கு உண்டு. எமது மக்களுக்கு கல்வி புகட்டுவதற்காக நாம் பணத்தைச் செலுத்துகிறோம். எனவே பல்கலைக்கழகங்கள் முறையாக செயற்பட வேண்டுமென நாம் விரும்புகிறோம்.

இந்த ஆர்ப்பாட்டம் ருஹுணு பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவது எனக்கு கவலையளிக்கிறது.” என்று அதிபர் தெரிவித்தார்.

நினைவுச் சின்னம்

அழுத்தங்களுக்கு உள்ளாகி எவரையும் பதவி நீக்க முடியாது - ரணில் வெளிப்படை | Overnment Will Not Be Pressured Protests President

இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமைக்காக SLTC ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ரஞ்சித் ஜி.ரூபசிங்க நினைவுச் சின்னமொன்றை அதிபரிடம் கையளித்தார்.

உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி. சுரேன் ராகவன், SLTC ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ரஞ்சித் ஜி.ரூபசிங்க, ‘த ஹேக்’ பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைகளுக்கான இணைப் பேராசிரியர் ஹோவர்ட் நிக்கோலஸ், புத்திஜீவிகள், உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026