"விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள்" ஆட்லெறிகளைக் கைப்பற்றிய வெற்றிச்சமர் (காணொளி)
ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு அசாத்தியமான சாதனைகளால் அதிகம் நிரம்பப்பெற்றது.
மனித வரலாற்றின் ஒப்பற்ற காலகட்டங்களும் அதன் நாயகர்களும் மனிதர்களாக உலாவிய நிலமொன்றில் உலகமே வியந்து பல சாதனைகளை ஈழத்தமிழர்கள் தமது ஒவ்வொரு நகர்வுகளிலும் மேற்கொண்டிருக்கிறார்கள்.
அது போரியலாக இருக்கலாம், கல்வியாக இருக்கலாம் ஏன் பண்பாடாக்கூட இருக்கலாம்.ஆனால் அதிக பிரமிப்புகளை ஏற்படுத்துகின்ற ஒப்பற்ற சாதனைகளாக ஈழத்தமிழர்களின் போரியல் சாதனைகள் இருந்து கொண்டுருக்கிறது.
சிறிலங்காவின் சிங்கள அரசாலும் அதன் படைகள் இனவாத சிங்களவர்கள் ஒட்டுக் குழுக்கள் என பன்முக ஒடுக்குமுறைகளுக்கு உட்பட்டிருந்த ஈழத்தமிழர்களை அந்த ஒடுக்குமுறைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளவும் அவர்களின் பூர்வீகத்தாயகத்தாகத்தை பெற்றுக் கொள்ளவுமாக ஏராளமான போராட்ட இயக்கங்கள் தோற்றம்பெற்றன.
அவர்களுள் தொடர்ச்சியாக தமது பயணத்தை மேற்கொண்டவர்களும் உலகவாழ் தமிழர்களில் பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமது போராளிகள் என மனங்கொள்ளப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளே.
கடந்த நான்கு தசாப்தங்களுக்கு அதிகமாக ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டை கைக்கொள்ளும் ஏக பிரதிநிதித்துவத்தை ஈழத்தமிழர்கள் விடுதலைப்புலிகளுக்கு வழங்கியிருந்தார்கள்
அதற்கேற்றாற்போலவே விடுதலைப்புலிகளும் சிறிலங்காவில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அக்கிரமங்களுக்காக போராடி பல்லாயிரக்கணக்கான தமது விடுதலை வீர்ரகளை மாவீரர்களாக தியாகித்திருக்கிறார்கள்.
குறிப்பாக முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் சுமார் 400 போராளிகள் தாயக மண்ணுக்காக தம் உயிரை தியாகம் செய்தனர்.
ஈழவர் வரலாற்றில் மிகப்பெரும் வெற்றிகளையும் ஆயுத தளபாடங்களையும் பெற்றுத்தந்த இச்சமரை ஞாபகபடுத்தும் காணொளி.....