அமெரிக்காவிலிருந்து வந்த பொதி : அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி
அமெரிக்காவிலிருந்து வந்த பொதியை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமெரிக்காவிலிருந்து கொழும்பு ட்ரைக்கோ விமான பொதி நிலையத்திற்கு கம்பகாவில் உள்ள பெண்ணொருவரின் விலாசத்திற்கு முகவரியிட்ட நிலையில் பொதியொன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
குறித்த பொதியில் சந்தேகமடைந்த சுங்க வருமான கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் அதனை இன்று (21) திறந்து பார்த்துள்ளனர்.இதன்போது அந்த பொதியில் 6 கோடியே 69 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 05 கிலோ 161 கிராம் மரிஜூவா மற்றும் 511 கிராம் கொக்கெய்ன் என்பன உணவு டின்னில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பொதியை பெற்றுக்கொள்ள வந்தவர்
இந்த பொதியைபெற்றுக்கொள்வதற்காக கம்பகா பகுதியைச் சேர்ந்த பெண்ணின் எழுத்துபூர்வ அனுமதியுடன் வந்த கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் உதவி சுங்க அத்தியட்சகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக இந்த போதைப்பொருள் தொகை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்