இலங்கைக்குள் கெஹெல்பத்தரவின் கீழ் பணியாற்றிய பாகிஸ்தானியர்கள்
விசாரணையில் கண்டறியப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலையில் பாகிஸ்தானியர்கள் இருவர் பணியாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த விடயத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளிப்படுத்தியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணையின் போது, நுவரெலியா பகுதியில் கெஹெல்பத்தர பத்மே நடத்தும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை பற்றிய தகவல்கள் வெளியாகின.
பாகிஸ்தானிய பிரஜைகள்
அது தொடர்பில் இன்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, "இந்த நாட்டில் நீண்ட காலமாக ஒரு குற்றவியல் கலாச்சாரம் உருவாகியுள்ளது.
அந்த கலாச்சாரத்திற்குள் உருவாக்கப்பட்ட செயல்பாடுகள் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நாட்டில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலையை நடத்துவதற்காக பாகிஸ்தானிய பிரஜைகள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
அரசியல்வாதிகள்
கைது செய்யப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினர்கள் அரசியல்வாதிகள் அவர்களை எவ்வாறு வளர்த்தார்கள், அவர்களுடன் உறவுகளைப் பேணினர் மற்றும் அவர்களின் பணிகளைச் செய்தார்கள் என்பது குறித்து சில வெளிப்பாடுகளை வெளியிடுகின்றனர்.
எதிர்காலத்தில் ஆழமான மற்றும் முழுமையான விசாரணைகள் மூலம் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட வேண்டும், எனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களம்ட இந்த விசாரணைகளை ஆழமாக நடத்தி வருகிறது." என்றார்.
இந்த நிலையில், குறித்த ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலைக்காக நுவரெலியா பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதையும் சிஐடியினர் கண்டுபிடித்துள்ளதுடன், அதற்கு ரூ. 4 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ரூ. 4 மில்லியனுக்கும் முதலிட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
