பழிக்கு பழி : இந்தியா தொடர்பில் பாகிஸ்தான் எடுத்த உடனடி நடவடிக்கை
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை அடுத்து இந்தியா(india),பாகிஸ்தான்(pakistan) இடையிலான முறுகல் நிலை உச்சம் தொட்டுள்ளது.
குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதிநீர் ஒப்பந்தம் இரத்து, பிரபலங்களின் எக்ஸ் தள பக்கங்கள் முடக்கம் என பல நடவடிக்கைகள் நாளாந்தம் எடுக்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை
இந்த நிலையில் இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்து இந்திய அரசு உத்தரவிட்ட நிலையில் இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் துறை முகங்களில் இந்திய கப்பல்களுக்கு பாகிஸ்தான் உடன் நடைமுறைக்கு வரும் வரையில் தடை விதித்து உள்ளது.
பாகிஸ்தான் பதிலடி
இந்திய கொடிகளுடன் வரும் எந்த கப்பல்களையும் பாகிஸ்தான் துறைமுகங்களில் அனுமதிக்க கூடாது என்றும் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்கள் இந்திய துறை முகங்களுக்கு செல்லக்கூடாது என பாகிஸ்தான் கடல்சார் விவகார அமைச்சகத்தின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் பிரிவு உத்தரவிட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
பொருளாதார நலன் மற்றும் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
