சிக்கலில் இம்ரான்கான் - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பரபரப்பு தீர்ப்பு
imran khan
court
pakistan
parliament
dissolve
By Sumithiran
பாகிஸ்தானில் தேசியப் பேரவை எனப்படும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக சபாநாயகர் அறிவித்தது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது இம்ரான் கானுக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பிரதமர் இம்ரான் கான், நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு அதிபருக்கு அறிவுறுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், வரும் ஏப்ரல் 9-ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டவும் சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அந்தக் கூட்டத்தின்போது அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி