அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பாகிஸ்தான்
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானியர்கள் நேரில் பேச விரும்புவதால், அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை இன்று இஸ்லாமாபாத்திற்கு அனுப்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானின் உயர் மட்ட அதிகாரிகளை மட்டுமே சந்திப்பார் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியுள்ள நிலையில் அவரிடமிருந்து வேறுவிதமான செய்தி வெளியாகியுள்ளது.
சலுகையை முன்வைக்கும் ஈரான்
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே எந்த சந்திப்பும் நடைபெற திட்டமிடப்படவில்லை எனவும் ஈரானின் கருத்துக்கள் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
ஈரானில் தற்போது பொறுப்பில் உள்ளவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார்.

அத்துடன் ஈரான் ஒரு சலுகையை முன்வைக்கிறது, அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் ஆனால் அந்த சலுகை என்னவென்று அவருக்கு இன்னும் தெரியவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தர்.
அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டத்தை நடத்த பாகிஸ்தான் தயாராகி வருவதால், இஸ்லாமாபாத் முழுவதும் பலத்த பாதுகாப்பு நிறுவப்பட்டுள்ளதுடன் முக்கிய வீதிகள் மூடப்பட்டு பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்