‘செத்துத் தொலை’ என்று கூறி ஈரான் மீது தாக்குதல் நடாத்திய பாகிஸ்தான்: தொடங்குகிறதா இன்னொரு போர்!
ஈரான் மீதான பதிலடிக்கு பாகிஸ்தான் சூட்டியிருந்த பெயர்: 'Operation Marg Bar Sarmachar'.
பாரசீக மொழியில் 'Marg Bar' என்றால் 'செத்து தொலை' என்பது பொருள்.
'Sarmachar' என்பது போராளிகளைக் குறிப்பதற்கு பயன்படுகின்ற சொல்.
அமெரிக்கா பற்றியோ அல்லது இஸ்ரேல் பற்றியோ குறிப்பிடுகின்ற போது “Marg Bar America..” “Marg Bar Israel..” என்ற சொல்லாடலைத்தான் ஈரானியர்கள் பாவிப்பார்களாம்.
அதாவது ‘செத்துத் தொலை அமெரிக்கா..’ ‘செத்துத் தொலை இஸ்ரேல்..’ இதே பாணியில் ஈரானில் செயற்படுகின்ற போராளிகளைச் ‘செத்துத் தொலையுங்கள்’ என்று கூறி இன்று அதிகாலை பாகிஸ்தான் ஈரான் மீது அவ்வாறான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அணுவாயுத நாடான பாகிஸ்தான் மீது ஈரான் நடாத்திய ஏவுகணைத் தாக்குதலும், ‘செத்துத் தொலை’ என்று கூறி மேற்கொண்ட பதில் தாக்குதல் தொடர்பான விரிவான விளக்கமான ஆய்வினை எடுத்துக் கூறுகிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |