ட்ரம்பின் மிரட்டலுக்கு அடி பணிந்தது பனாமா

Donald Trump United States of America China Panama
By Sumithiran Feb 03, 2025 10:03 PM GMT
Report

  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்(donald trump) தொடர் மிரட்டல்களுக்கு, பனாமா(panama) நாடு அடிப்பணிந்ததுடன் சீனாவுடனான(china) ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளது.

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அமைந்துள்ளது பனாமா கால்வாய். கரீபியன் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கும் வகையில், 82 கி.மீ., துாரத்துக்கு இந்த கால்வாய். அமைந்துள்ளது உலகின் கடல்சார் வணிகத்தில், 5 சதவீதமும், அமெரிக்காவின் வர்த்தகத்தில், 50 சதவீதமும், இந்த கால்வாய் வழியாகவே நடக்கின்றன. உலகின் முக்கிய கடல்சார் வணிகத்துக்கான இணைப்பாக இந்த கால்வாய் உள்ளது.

கால்வாய் பராமரிப்பு உரிமையை விட்டுக் கொடுத்த அமெரிக்கா

கடந்த, 1977ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த கால்வாயை நிர்வகிக்கும் உரிமையை பனாமாவுக்கு அமெரிக்கா வழங்கியது. அது இரு தரப்பும் பயன்படுத்துவதாக இருக்க வேண்டும். உள்நாட்டு போர் அல்லது வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கம் ஏற்பட்டால், பனாமா கால்வாயை அமெரிக்கா மீண்டும் எடுத்துக் கொள்ளும் என்பதே அந்த ஒப்பந்தம்.

ட்ரம்பின் மிரட்டலுக்கு அடி பணிந்தது பனாமா | Panama Bows To Trumps Threats

மேலும், 1999ல் பனாமா கால்வாயை அமெரிக்காவிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. ஆனாலும், இதை அமெரிக்கா வலியுறுத்தாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், 'பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேடிவ்' என்ற சர்வதேச அளவில் நாடுகளை இணைக்கும் பெருவழிப் பாதை திட்டத்தை சீனா உருவாக்கியது. இதில், பனாமாவும் இணைந்து கொண்டது.

பிரான்சில் முதியோர் காப்பகத்தில் இடம்பெற்ற அனர்த்தம் : கருகி மாண்டனர் முதியவர்கள்

பிரான்சில் முதியோர் காப்பகத்தில் இடம்பெற்ற அனர்த்தம் : கருகி மாண்டனர் முதியவர்கள்

 சீனா தொடர்பில் ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட சந்தேகம்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக சமீபத்தில் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த திட்டத்தின் வாயிலாக, பனாமா கால்வாயை சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

ட்ரம்பின் மிரட்டலுக்கு அடி பணிந்தது பனாமா | Panama Bows To Trumps Threats

பனாமா கால்வாயில் சீனாவின் ஆதிக்கத்தை ஏற்க முடியாது என்றும், பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் கூறி வந்தார். இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மார்க்கோ ரூபியோ, தன் முதல் வெளிநாட்டு பயணமாக, பனாமா சென்றுள்ளார். அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் ரூயல் முலினோவை அவர் சந்தித்துப் பேசினார்.

வெளிநாடொன்றில் கார் குண்டுவெடிப்பு: பெண்கள் உட்பட விவசாய தொழிலாளர்கள் பலர் பலி

வெளிநாடொன்றில் கார் குண்டுவெடிப்பு: பெண்கள் உட்பட விவசாய தொழிலாளர்கள் பலர் பலி

அப்போது, ஜனாதிபதி ட்ரம்பின் நிலைப்பாட்டை அவர் விளக்கினார். சீனாவுடனான, பெருவழிப் பாதை திட்டத்தின் ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால், பனாமா மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ரூபியோ கூறினார்.

இந்நிலையில், கடந்த, 2017ல் சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கப் போவதில்லை என்று, பனாமா ஜனாதிபதி ஜோஸ் ரூயல் முலினோ உறுதியளித்தார். அமெரிக்காவின் கவலையைப் புரிந்து கொண்டு, இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி