வெளிநாடொன்றில் நிரந்தரமாக முடக்கப்பட்ட முகநூல் : அதிர்ச்சியில் மக்கள்
பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea) முகநூல் முடக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெறுப்புப் பேச்சு, போலிச் செய்திகள் மற்றும் ஆபாசப் படங்களை கட்டுப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியாவில் முகநூல் மிகவும் பிரபலமான சமூக ஊடகமாகும், அங்கு பல சிறு வணிகங்கள் உட்பட 1.3 மில்லியன் மக்கள் முகநூலை பயன்படுத்துகின்றனர்.
பத்திரிகை சுதந்திரம்
இந்தநிலையில், நாட்டில் பத்திரிகை சுதந்திரம் குறைந்து வரும் நிலையில், பொது விவாதங்களை எளிதாக்குவதில் சமூக ஊடகங்களும் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
இவ்வாறான பிண்ணனியில், இந்த நடவடிக்கை அரசியல் எதேச்சதிகாரத்தின் எல்லைகள் மற்றும் மனித உரிமைகளை கட்டுப்படுத்தும் செயற்பாடு என பப்புவா நியூ கினியாவின் ஊடகக் குழுவின் தலைவர் நெவில் சோய் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்புச் சட்டங்கள்
அத்தோடு, இஅது தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலன் பேர்ட், “நாங்கள் இப்போது ஆபத்தான பகுதிக்குள் செல்கிறோம், இந்த கொடுங்கோன்மையைத் தடுக்க அனைவரும் சக்தியற்றவல்களாக உள்ளனர்.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர் திங்கட்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது அரசாங்கத்திற்கு ஒன்லைன் தகவல்தொடர்புகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அதிகாரங்களை வழங்குகிறது. இந்த கொடூரமான சட்டம் எமது சுதந்திரங்களைப் பறிக்க வடிவமைக்கப்பட்டது, முகநூலை தடைசெய்வது அதன் முதல் படி”என அவர் தெரிவித்துள்ளார்.
போலி கணக்கு
முகநூல் முடக்கப்பட்டிருந்த போதிலும் VPNகளைப் பயன்படுத்தி பலர் முகநூலை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பப்புவா நியூ கினியா அதிகாரிகள் நீண்ட காலமாக முகநூலிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டில், போலி கணக்குகளை வேரறுக்க அதிகாரிகள் முகநூலிற்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 நாட்கள் முன்
