இன்றைய நாடாளுமன்ற அமர்வு - நேரலை
Parliament of Sri Lanka
By Vanan
நாடாளுமன்ற அமர்வு இன்று (24) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை, 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின்படி தற்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர் திரு. ஜே.டபிள்யு.எம்.ஜே.பி.கே. ரட்நாயக்கவை அந்த உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கான உரை நிறைவேற்றப்படவுள்ளது.
அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேரலை

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி