அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் கேள்வி எழுப்ப முடியுமா!
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் கேள்வி எழுப்ப முடியுமா என அதிபர் அலுவலகம், சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளது.
பாதீட்டு விவாதத்தின் போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை தீர்மானங்களை சிறப்புரிமைப் பிரச்சினைகளாகக் கருதி சவாலுக்கு உட்படுத்துவதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதனை கவனத்தில் கொண்டு இந்த விடயங்கள் தொடர்பில் ஆராயுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிபர் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளார்.
சிறப்புரிமை பிரச்சினைகள்
இவ்வாறான சிறப்புரிமை விடயங்களை முன்வைப்பது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாக அமையுமா என்பதை தெரிவிக்குமாறு அதிபர் அலுவலகம், சட்டமா அதிபரிடம் கோரியுள்ளது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிபரை இணைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினைகளை எழுப்புவதற்கான இயலுமைகள் தொடர்பிலும் அதிபர் அலுவலகம் சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |