சற்றுமுன்னர் ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள்
இன்றைய (19.06.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள்,
📌 மு.ப. 09.30 - மு.ப. 10.00 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள்.
📌 மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
📌 மு.ப. 11.00 - மு.ப. 11.30 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
📌 மு.ப. 11.30 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்),
📌 (i) கறவை மாடு இறக்குமதி செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் II ஆம் பகுதியின் கீழ் 15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான முற்பணம் வழங்குதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை.
📌 (ii) பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை. அதன் நேரடி ஔிப்பரப்பை கீழே காணலாம்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
