பொதுமக்களுக்கு மின்சாரத்தடை! மின்சார ஒளியால் பிரகாசமாக காட்சியளிக்கும் நாடாளுமன்றம்
நாட்டுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய, நாட்டின் உயர் சபையான நாடாளுமன்றம், அவ்வாறு நடந்துக்கொள்ளவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் நேற்று தமது அமர்வை நடத்தியபோது இந்த விடயம், பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சாரத்துக்கான கடும் நெருக்கடியால், அரச நிறுவனங்கள், கடுமையான ஒழுங்குவிதிகளை கடைப்பிடிக்கவேண்டும் என்று சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து மின்சார விளக்குகள் மற்றும் குளிரூட்டல்களும் நேற்று இயக்கப்பட்டதாக பிரதி சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பொதுமக்கள், அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்று லியுறுத்தப்படும் இந்த நேரத்தில் நாடாளுமன்றம் அதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாக சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாட்டிற்கு உதவுவதற்காக இந்த வளாகத்திற்குள் கூடுதல் விளக்குகளை அணைக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
