கட்சி அரசியல் முக்கியமில்லை - ஊகங்களுக்கு ஹர்ஷ டி சில்வா பதில்
Dr Harsha De Silva
Samagi Jana Balawegaya
By Vanan
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக ஊகங்கள் பரவி வருகின்றன.
இந்த நேரத்தில் கட்சி அரசியல் முக்கியமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
புதிய ஆணை தேவை
தேசத்தை கட்டியெழுப்ப சரியான சித்தாந்தத்தை கடைப்பிடிப்பதே இப்போது முக்கியம் என அவர் கூறினார்.
எங்களைப் பற்றிய ஊகங்களிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியது என்னவென்றால், தேசத்தை கட்டியெழுப்பக்கூடிய திறமையானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளனர், என்று அவர் கூறினார்.
தேசத்தை கட்டியெழுப்ப விரும்புவோருக்கு புதிய ஆணை தேவை என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்