"பசி உறு நிலம்" கவிதை நூல் அறிமுக நிகழ்வு (படங்கள்)
பேராதனை பல்கலைக்கழக மாணவன் ச. வில்வரசனின் "பசி உறு நிலம்" கவிதை நூல் அறிமுக நிகழ்வு கிளிநொச்சி பிரதேச சபை மண்டபத்தில் நேற்றுமுன்தினம்(14) வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வினை ஊடகவியலாளர் க.உசாந்தன் தொகுத்து வழங்க, நிகழ்வினை துனுக்காய் கல்வி வலய தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர் சு.லோகேஸ்வரன் தலைமை தாங்கினார்.
விமர்சன உரை
இந்நிகழ்வில் யாழ் - கிளி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு நூலினை அறிமுகம் செய்து வைத்திருந்தார்.
தொடர்ந்து, மகா மகாதேவா சுவாமிகள் சைவ சிறுவர் இல்ல தலைவர் திரு. மோகனபவனும் திருவையாறு மகா வித்தியாலய அதிபர் கி விக்கினராஜாவும் கிளி. வடக்கு வலய தமிழ் ஆசிரிய ஆலோசகர் ஞா.கலைச்செல்வியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
நூலிற்கான விமர்சன உரையை "பயங்கரவாதி" நூலின் ஆசிரியர் கவிஞர் தீபச்செல்வன் நிகழ்த்தியிருந்தார்.
தொடர்ந்து நூலாசிரியர் வில்வரசனின் ஏற்புரையுடன் நூல் அறிமுக நிகழ்வு முடிவு பெற்றது.
நிகழ்விற்கு கவிஞர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் , மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.





