கடவுச்சீட்டு விநியோகம் தாமதம்..! விண்ணப்பங்கள் இடைநிறுத்தம் - வெளியான அறிவித்தல்
Sri Lanka
Passport
Student Visa
Tourist Visa
By pavan
குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தில் கணினி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளமையினால் அதன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் இன்று தாமதம் ஏற்படுமென திணைக்கள பேச்சாளர் அறிவித்துள்ளார்.
ஆகையால், மறு அறிவித்தல் வரை கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கணனி கட்டமைப்பு கோளாறு
பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் கணனி சேவர் கோளாறு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி