உக்ரைனின் மிட்நைட் ஒப்ரேஸன் - ரஸ்யாவிற்கு காத்திருக்கும் அடுத்த அடி
உக்ரைனின் கெர்சன் நகரில் தற்போது அந்நாட்டு இராணுவத்தினரால் “மிட்நைட் ஒப்ரேஸன்“ என்ற பெயரில் புதுவித சோதனைமுறை இடம்பெற்று வருகிறது.
சில மாதங்கள் ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க்கப்பட்ட குறித்த நகரில் அப்போது அவர்களுக்கு உதவியவர்களை தேடிப் பிடிக்கும் முயற்சியில் உக்ரைன் இராணுவம் ஈடுபட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் உக்ரைன் இராணுவம் அவர்களின் வீடுகளைச் சோதனையிடுகின்றன.அவர்களிடம் இருக்கும் ஆவணங்களைச் சரிபார்த்து வருகவதோடு கெர்சன் முழுக்க வசிக்கும் அத்தனை பேரிடமும் இப்படி விரிவான சோதனையை நடத்தி சந்தேகப்படும் நபர்களைத் தனியாகவும் கைதுசெய்து வைத்துள்ளது.
புடினுக்கு சிக்கல்
உக்ரைன் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தாலும் இதுவரை போர் தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. இப்போது கடந்த சில வாரங்களாக இது ரஸ்யாவுக்கு புதிய தலைவலியை உக்ரைன் இராணுவம் கொடுத்துள்ளது.
ரஸ்யா அதிபர் புடினுக்கு இந்தாண்டு தொடக்கம் முதலே ஏகப்பட்ட சிக்கல்தான். ஒரு புறம் அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை ரஸ்யா மறுத்தாலும் கூட, இதுதான் உண்மை என்று சர்வதேச ஊடகங்கள் கூறி வருகின்றன.
கடந்த பெப்ரவரி மாதம் யாருமே எதிர்பாராத வகையில் திடீரென உக்ரைன் மீதான போரை ஆரம்பித்தார் புடின். முதலில் சில மாதங்களில் இந்தப் போர் முடிவுக்கு வந்துவிடும் என்றே பலரும் நினைத்தனர்.
கெர்சன் நகரம்
இருந்த போதிலும், பல மாதங்களைக் கடந்தும் கூட போர் முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பல பகுதிகளிலும் உக்ரைன் வீரர்கள் ரஸ்யா இராணுவத்திற்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர்.
அதிலும் கடைசி சில வாரங்கள் உக்ரைன் கைகளே ஓங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் போரின் தொடக்கத்தில் ரஸ்யா கைப்பற்றிய இடங்களைக் கூட ஒவ்வொன்றாக இழந்து வருகிறது. இப்போது போரை முடித்தால் அது தனக்கு அவமானம் என்பதாலேயே புதின் போரைத் தொடர்ந்து வருகிறார்.
அப்படித்தான் தெற்கு உக்ரைன் நகரமான கெர்சன் இருந்து ரஸ்யா இராணுவம் சில வாரங்களுக்கு முன்பு பின்வாங்கியது. இப்போது கெர்சன் நகரம் முழுக்க முழுக்க உக்ரைன் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
துரோகிகள்
இப்போது உக்ரைன் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சன் நகரையும் மேற்கே கிழக்கே இருக்கும் ரஸ்யப் படைகளையும் டினிப்ரோ ஆறு தான் பிரிக்கிறது. இதன் காரணமாக ஆற்றின் அந்தப் பக்கம் இருந்து வரும் நபர்களை உக்ரைன் படைகள் உற்றுக் கவனித்து வருகிறது. ஆற்றைக் கடந்து வருபவர்களைத் தனியாகப் பிடித்து விசாரணை செய்து வருகிறது.
இது தொடர்பாக உக்ரைன் இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், "இங்குள்ள அனைவரையும் சோதனை செய்து வருகிறோம். அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து வருகிறோம்.
இப்போது இங்கிருக்கும் அனைவரையும் எங்களுக்குத் தெரியும். அந்தளவுக்குத் தீவிரமாகச் சோதனை நடத்தி வருகிறோம். தமது இராணுவம் துரோகிகள் அத்தனை பேரையும் நிச்சயம் பிடிக்கும். ரஸ்யாவுக்கு உதவிய துரோகிகளுக்குத் தக்க தண்டனை வழங்கப்படும்" என தெரிவித்தார்.
மிரண்டு போயுள்ள மக்கள்
சுமார் 8 மாதங்களாக ரஸ்யப் படைகள் கட்டுப்பாட்டில் கெர்சன் நகரம் இருந்த நிலையில், இப்போது தான் மீண்டும் உக்ரைன் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ரஸ்யாவிடம் இந்த நகரம் இருந்த போது, இங்குள்ள சிலரே ரஸ்யாவுக்கு ஆதரவாக உதவியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னுமே சிலர் ரஸ்ய இராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் ரஸ்யாவுக்கு முக்கிய தகவல்களை அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. அவர்களை கைதுசெய்யும் நோக்கிலேயே இந்த சோதனைமுறை ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
மேலும், ரஸ்யாவுக்கு உதவியவர்கள் குறித்த தகவல்களை வழங்கலாம் என்று உக்ரைன் இராணுவம் கூறி இதற்கென தனியாக இரகசிய இலக்கத்தையும் கொடுத்துள்ளனர். இதனால் உக்ரைன் எடுக்கும் தீவிர நடவடிக்கையில் மிரண்டு போயுள்ளனர் அந்நகரில் வசிக்கும் மக்கள்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
