போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டைவிட்டு தப்பியோட்டம்
Bandaranaike International Airport
Ranil Wickremesinghe
Singapore
By Sumithiran
மதங்கள் தொடர்பில் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க உரிய தரப்பிற்கு உத்தரவிட்டிருந்தார்.
சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்
இந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே ஜெரோம் இன்று அதிகாலையில் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்