இலங்கையில் உருவாகும் புதிய அரசியல் கட்சி
Champika Ranawaka
Sri Lankan political crisis
By Vanan
“ஐக்கிய குடியரசு முன்னணி” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இம் மாதம் 22 ஆம் திகதி புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கட்சிக்கான ஆதரவு
மே மாதம் 22ஆம் திகதி இலங்கையின் குடியரசு தினத்தை முன்னிட்டு புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் என அவர் கூறுகிறார்.
பழைய அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளாலும், பழைய அரசியல் அமைப்புகளாலும் நாடு வங்குரோத்து நிலைக்கு மாறியுள்ளதாகத் தெரிவித்த பாட்டலி சம்பிக்க ரணவக்க, புதிய குழுவொன்றுக்கு களம் அமைத்துக் கொடுப்பது இன்றியமையாதது என்றார்.
தமது புதிய அரசியல் கட்சிக்கு பொதுமக்கள் ஆதரவளிப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி