நோயாளர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை - இருவர் கைது..!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவரை கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த வழக்கின் பிரதான சந்தேக நபரும் அதற்கு உடந்தையாக இருந்த ஒருவரும் தெமட்டகொட பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சி, விஹாரை பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய ஒருவரும், மதவாச்சி, கோனா கும்பக்கொல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரிடமும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கையடக்கத் தொலைபேசி, சிம் அட்டை மற்றும் கொலையின் போது அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் என்பனவற்றை கைப்பற்றியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி