திருகோணமலையில் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா
ஈழத்து எழுத்தாளரான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவலின் அறிமுக விழாவானது திருகோணமலையில் ஓய்வு நிலை அதிபர் க .யோகானந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விழாவானது நேற்று சனிக்கிழமை (17) மாலை 3.20 மணிக்கு திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் தலைமையுரையை யோகானந்தனும், தொடக்கவுரையை கவிஞர் மற்றும் ஆசிரியரான தி.பவித்ரனும் மற்றும் சிறப்புரையை தண்டாயுதபாணியும் வழங்கி நிகழ்வை சிறப்பித்தனர்.
நாவல் அறிமுகம்
அத்துடன் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி . தண்டாயுதபாணிக்கு நூல் ஆசிரியரான தீபச்செல்வனால் நூலின் முதல் பிரதி வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நாவலானது, யாழ் பல்கலைக்கழக மாணவத் தலைவன் ஒருவரின் காதலையும் வீரத்தையும் பேசும் நாவலாகவுள்ளது.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளின் நியாயங்களையும் அறங்களையும் நுணுக்கமான வகையில் பதிவு செய்ததாக குறித்த நாவல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |