லண்டனில் நடைபெற்ற தீபச்செல்வனின் "பயங்கரவாதி" நாவல் அறிமுக விழா
Sri Lankan Tamils
London
Tamil diaspora
By Pakirathan
ஈழத்தின் கவிஞரும், நாவலாசிரியருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் அறிமுக விழா, Alperton community school இன் பிரமாண்ட அரங்கில் நேற்றையதினம் நடைபெற்றது.
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து, அரங்கை நிறைத்து, தாயகப் படைப்பாளியின் படைப்பை கொண்டாடியுள்ளனர்.
நெகிழ்ச்சி மிக்க ஏற்புரை
குறித்த நிகழ்விற்கு தாயகப் படைப்பாளி தீபச்செல்வன், நேரடியாக கலந்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இயலாத நிலையில் தொலைபேசி வழியாக தீபச்செல்வன், நெகிழ்ச்சி மிக்க ஏற்புரையினை நிகழ்த்தினார்.

