கனடாவில் கோர விபத்து - உயிருக்கு போராடும் பாதசாரிகள்
Canada
Accident
By pavan
கனடாவின் ஆம்கியூவில் லொறி ஒன்று ஏற்படுத்திய விபத்தில் பாதசாரிகள் பலர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கியூபெக் மாகாணத்தில் உள்ள ஆம்கியூ நகரில், பிற்பகல் மூன்று மணியளவில் அதிவேகமாக வந்த லொறி ஒன்று பாதசாரிகள் மீது பலமாக மோதியது.
இதில் பலர் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி கைது
இந்த கோர விபத்தில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
லொறியை இயக்கிய சாரதியை கைது செய்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்