கட்டார் மீது இஸ்ரேல் அதிர்ச்சிகர வான் தாக்குதல்!
இஸ்ரேல், கத்தாரில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைமை உறுப்பினர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலில் ஹமாஸின் டோஹா பணியகத் தலைவர் கலீல் அல்ஹையா உள்ளிட்ட தலைவர்கள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் இராணவ உயர் அதிகாரி ஒருவர் தாக்குதலின் முடிவுக்காக தற்போது காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இறுதி தருவாயில் மகிந்தவுக்கு அழைப்பு விடுத்த லசந்த: மாட்டைச் சுடும் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை
துல்லியமான தாக்குதல்
எவ்வாறாயினும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ள கத்தாரின் வெளிவிவகார பேச்சாளர் மேஜித் அல்அன்சாரி இதை “பயம் கலந்த குற்றச் செயல்” என்றும், சர்வதேச சட்டங்களையும் ஒழுங்குகளையும் முற்றிலும் மீறியதாகும் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, கத்தாரில் உள்ள ஹமாஸ் பேச்சுவார்த்தையாளர்கள் தான் இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாக ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை மற்றும் Shin Bet பாதுகாப்பு முகமை கூட்டணியில் துல்லியமான தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.
வெடிச்சத்தங்கள்
இஸ்ரேல் அறிக்கையில், இந்த ஹமாஸ் தலைமை உறுப்பினர்கள் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7இல் நடந்த தாக்குதலுக்கு நேரடி பொறுப்பாளர்கள் என்றும், இஸ்ரேல் நாட்டிற்கு எதிரான போர் நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்தவர்கள் என்றும் கூறியுள்ளது.
மேலும், தாக்குதலுக்கு முன் கலீல் அல்ஹையா கத்தாரி பிரதமர் ஷெய்க் முகம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல்-தானிஐ சந்தித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில், டோஹாவில் பல வெடிச்சத்தங்களும் கடும் புகைமூட்டமும் எழுந்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
