ட்ரம்பிற்கு தொடரும் சோதனை - அடுத்தடுத்து பதவி விலகும் உயர் அதிகாரிகள்
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கடற்படை செயலாளர் ஜோன் பெலன் தனது பதவியிலிருந்து விலகுவதாக பென்டகன் அறிவித்துள்ளது.
பென்டகன் ஊடகப் பேச்சாளர் ஷோன் பார்னெல் சமூக வலைதளப் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் "உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்" விலகுவதாக பென்டகன் ஒரு சுருக்கமான அறிக்கையில் அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான காரணத்தையோ அல்லது விலகுவது அவருடைய முடிவா என்பதே குறிப்பிடப்படவில்லை.
தலைமைத்துவ மாற்றங்கள்
கடந்த சில மாதங்களில் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறிய உயர்மட்ட இராணுவத் தலைவர்களில் இவரும் இணைந்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணிக்கு இடையே நிலவும் கடும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த தலைமைத்துவ மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்நிறுத்தத்தை மீறியுள்ளதன் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையை திறக்க முடியாது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவினால் ஈரான் துறைமுகங்கள் முடக்கப்படுவது உலகப் பொருளாதாரத்தைப் பிணைக் கைதியாக வைத்திருப்பதற்குச் சமமானது என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், ஈரானுடன் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் அடுத்த 36 முதல் 72 மணித்தியாலங்களுக்குள் ஆரம்பமாக வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |