கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானசாலைகள் - அநுரவிடம் பறந்த கோரிக்கை
Kilinochchi
Anura Kumara Dissanayaka
SL Protest
By Thulsi
கிளிநொச்சியில் (Kilinochchi) அதிகரித்துள்ள மதுபானசாலைகளை மூடுமாறு கோரி கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (24-12-2024) நடைபெற்ற போராட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியிடம் மகஜர்
இப்போராட்டத்தின் போது அதிகரித்த மதுபான சாலைகளை மூடுமாறும் கோரி கிளிநொச்சி பசுமைப்பூங்கா முன்றலில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பேரணியை தொடர்ந்து ஜனாதிபதிக்கன கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மத தலைவர்கள் இணைந்து மாவட்ட அரச அதிபர் சு .முரளிதரன் கையளித்துள்ளனர்.
இப்போது போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் சமூக அமைப்புகள் மதத் தலைவர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெண்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி