நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீனிற்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி!
Court
SriLanka
Rishad Bathiudeen
Rajitra Jayasuriya
By Chanakyan
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று முதல் எதிர்வரும் 3 மாத காலத்திற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, ரிசாட் பதியூதீனின் கடவுச்சீட்டை வழங்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ரஜித்ரா ஜயசூரிய (Rajitra Jayasuriya) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரிசாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீனிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
