ஆயிஷா படுகொலை:அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்! தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வலியுறுத்தல்

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Kiruththikan May 31, 2022 12:50 AM GMT
Report

சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நேற்று (30) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியின் ஊடக அறிக்கை

ஆயிஷா படுகொலை:அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்! தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வலியுறுத்தல் | Perpetrators Should Be Given Maximum Punishment

“மேல்மாகாணம் பண்டாரகம -அட்டுலுகமவினை சேர்ந்த 9 வயதே நிரம்பிய சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பாக நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு எதிராக அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சிறுமி ஆயிஷா கடந்த மே 27 ஆம் திகதியன்று காணாமல் போனநிலையில் மறுதினம் இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச் சிறுமி செய்த தவறுதான் என்ன இக்கொடுமையை எந்த மனித நேயம் உள்ளவர்களால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது.

பல எதிர்கால கனவுகளோடு மலர வேண்டிய இச் சிறுமி இன்று கருகி இருக்கின்றாள். இச் சிறுமியே எமது மண்ணின் வரலாற்றில் கருகிய இறுதி மொட்டாக இருக்க வேண்டும். இந்த இழப்பினை ஆறுதல் படுத்துவதற்கு வார்த்தைகளே இல்லை.

அந்தச் சிறுமி வீடு திரும்பி வந்து சேரவேண்டும் என எல்லோரும் பிரார்த்தனை செய்த வேளையில் எமது நெஞ்சங்களில் இடி விழுந்தது போல் அவரது மரணச் செய்தி எம்மை உறைய வைத்துள்ளது.

இத்தகைய கொடூர செயல்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். சிறுவர்களை மதித்து அவர்களின் உரிமைகளைப் பேணி சிறந்த ஒரு எதிர்கால சந்ததியினை உருவாக்க வேண்டியது எம் அனைவரதும் தலையாய கடமையாகும்.

அதிகரிக்கும் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள்

ஆயிஷா படுகொலை:அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்! தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வலியுறுத்தல் | Perpetrators Should Be Given Maximum Punishment

அதேவேளை பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், வன்முறைகள் இடம் பெறுகின்ற போது அதனை விசாரிப்பதற்கும் தண்டனை வழங்குவதற்கும் தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதனை எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.

இவ்வாறு தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்படுமிடத்து குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை துரிதமாக கண்டறியமுடிவதுடன் மிக விரைவில் தீர்ப்பு வழங்கக் கூடியதாக அமையும்.

பாத்திமா ஆயிஷாவின் பிரிவால் தவிக்கும் பெற்றோர்,உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் சிறுமியின் ஆத்மா சாந்திக்காகவும் இறைவனை பிரார்த்திப்பதாகவும்” அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.   

ஆயிஷா படுகொலை:அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்! தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வலியுறுத்தல் | Perpetrators Should Be Given Maximum Punishment

தொடர்புடைய செய்தி 

படுகொலை செய்யப்பட்ட ஆயிஷா: குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞர்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
ReeCha
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026