தமிழர் பகுதியில் தொடரும் திருட்டு : சந்தேகநபர் காவல்துறையினரால் கைது
Sri Lanka Police
Jaffna
Nothern Province
Drugs
By Kathirpriya
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவத்தில் தொடர்ச்சியாக ஈடுபடும் நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவனே, நெல்லியடி காவல்துறையினரால் நேற்றைய தினம் (30) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது குறித்த நபரிடம் இருந்து ஐந்து தண்ணீர் பம்பிகளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளை நுகர்வதற்காக
பல இடங்களில் தொடர்ந்து தண்ணீர் பம்பிகள் திருடப்பட்டு வந்த நிலையில் இவை தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில் காவல்துறையினருக்கு கிடைத்திருந்தது.
அதனடிப்படையில் தேடுதலில் ஈடுபட்ட காவல்துறையினர் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
{
போதைப்பொருளை நுகர்வதற்காகவே குறித்த இளைஞன் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் திருட்டுக்களில் ஈடுபடுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 20 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்