ரணிலின் வீட்டை எரித்தவர் இலங்கையிலிருந்து தப்பி ஓட்டம்! தற்போது வெளியான தகவல்
ரணிலின் வீட்டை எரித்தவர் தப்பி ஓட்டம்
பதில் அதிபரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு எரியூட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவர் நாட்டில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து குற்றம் சுமத்தப்பட்டவர்கள், நாட்டில் இருந்து தப்பிச்செல்வதை தடுக்கும் முயற்சிகளை காவல்துறை தரப்பு எடுத்துள்ளது.
அதிபர் மாளிகை, அதிபர் செயலகம், அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம், கொழும்பு 03 இல் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை எரித்தமை மற்றும் நாடாளுமன்றத்திற்கு அருகில் வன்முறைகளை ஏற்படுத்தியமை தொடர்பில் குறைந்தது 50 பேர், காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விரைவில் நீதிமன்ற நடவடிக்கை
காணொளிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தேவையான ஆதாரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் விரைவில் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கூறுகிறது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களை இன்றைய முக்கிய செய்தியில் காண்க,
