அளவெட்டியில் டீசலை பதுக்கி அதிக விலைக்கு விற்றவர் சிக்கினார்(படங்கள்)
யாழ்ப்பாணம் அளவெட்டியில் டீசலை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவரை நேற்று மாலை தெல்லிப்பழை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, தெல்லிப்பழை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அளவெட்டி பகுதியில் உள்ள கடை ஒன்றில் டீசலை பதுக்கி விற்பனை செய்வதாக காவல்துறைக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது 291 லீற்றர் டீசல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதோடு டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய கடை உரிமையாளரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.



சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இரத்தத்தில் எழுதப்பட்ட புதிர்
4 நாட்கள் முன்