அமைதியற்ற பகுதியில் ஊரடங்கு உத்தரவு - பெரு பிரதமர் அதிரடி உத்தரவு
தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கைதாகி கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை அடுத்து மூத்த பெண் அரசியல்வாதியான டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார்.
பெட்ரோ காஸ்டிலோவின் பதவி நீக்கதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்ய வேண்டும் எனவும் தற்போதைய அதிபர் டினா பொலுவார்டே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசுக்கு எதிராக போராட்டம்
இந்த நிலையில் பெருவின் தென் கிழக்கில் ஜூலியாகா நகரில் உள்ள விமான நிலையம் அருகே முன்தினம் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது.
அப்போது பெட்ரோ காஸ்டிலோவின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். இதனை அடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை ஒடுக்கினர்.
ஊரடங்கு உத்தரவு
Peru Orders Curfew In Violence-Hit Region After 18 Deaths Amid Protests https://t.co/BspoZFk9Io pic.twitter.com/WplMod01aL
— NDTV News feed (@ndtvfeed) January 10, 2023
இதில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் 18 பேர் பலியானதைத் தொடர்ந்து வன்முறைப் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் தெற்கு புனோ பிராந்தியத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஆல்பர்டோ ஒட்டரோலா அறிவித்துள்ளார்.
3 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அதன்படி அடுத்த 3 நாட்களுக்கு உள்ளூர் நேரப்படி, இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
